அழகான காதலின் கடைசிப்பக்கங்கள் பிரியனின் ‘Last Chapter’ குறும்படம்

1258

Jaffna Zero Budget Films தயாரிப்பாக பிரியன் அருள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் “Last Chapter“.

இந்தப்படத்தில் சாத்வீகன், மான்விழி ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களாக நடிக்க சாரங்கன், துவாரகன், அங்கவன் மற்றும் கவாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

இதன் இசையமைப்பாளராக பவித்திரனும், படத்தொகுப்பாளராக ஷைரஜனும் பணியாற்றியிருப்பதுடன் உதவி இயக்குனர்களாக சாரங்கன் மற்றும் திரு ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

அத்துடன், உதவி ஒளிப்பதிவாளர்களாக ஆர்.எஸ்.ரமணி மற்றும் ஷைரஜன் ஆகியோர் பங்காற்றியுள்ளனர். குறும்படத்தில் வரும் பாடலை பிரியன் எழுதியுள்ளார். அதனை சாரங்கன் மற்றும் கஜன்சிகா ஆகியோர் பாடியுள்ளனர்.

அட்டகாசமாக இதனை எழுதி இயக்கியதுமட்டுமல்லாமல் அழகாக ஒளிப்பதிவினையும் செய்திருக்கின்றார் இயக்குனர் பிரியன் அருள். வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு..