டிரோன் பெர்ணான்டோ, ரோய் ஜக்சன் இணைவில் “கவிகாரா..” சகோதர மொழிப் பாடல்

551

இலங்கையின் முன்னணி தமிழ் இசையமைப்பாளராக விளங்குபவர் டிரோன் பெர்ணான்டோ. இவரது “டி மீடியா” சார்பில் அண்மையில் வெளிவந்துள்ள சகோதர மொழிப்பாடல் “கவிகாரா..”. இதனை நம் நாட்டு முன்னணிப் பாடகர்களில் ஒருவரான ரோய் ஜக்சன் பாடியுள்ளார். பாடல் வரிகள் சுசந்த ரேணுகா.

காணொளி வடிவில் வெளிவந்துள்ள இப்பாடலை கஷின் மத்தியூஸ் இயக்கியுள்ளதுடன், ஈழத்தின் முன்னணி ஒளிப்பதிவாளராக விளங்கும் ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு யாசிர் நிசார்தீன். பாடலில் சகோத மொழிக்கலைஞர்களான மதுஷி சொய்சா மற்றும் மனோஜ் சுரங்க டி சில்வா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் பாடகர் ரோய் ஜக்சனும் தோன்றியுள்ளார்.

Artist : Roy Jackson
Composer : Diron Fernando
Lyrics : Susantha Ranuka
Director : Cashien Mathews
DOP : Rishi Selvam
Editor : Yasir Nizardeen
Cast: Madushi Soysa, Manoj Suranga De Silvaa