Colombo MBZ உடன் கைகோர்த்திருக்கும் நடிகர் சிந்தர்

1506

இலங்கைத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திழ்பவர் சிந்தர். இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் அண்மையில் உருவான “பாலை” பாடல் இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் யு-ரியூப்பில் பார்வையிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்சமயம் அவர் Colombo MBZ உடன் கைகோர்த்துள்ளார்.

பாடகர் அமில பெரேராவின் கொழும்பு எம்.பி.இசட் நிறுவனமானது தமிழ் – சிங்கள கலைஞர்களின் கூட்டிணைவில் பல பாடல்களை கடந்த காலங்களில் தயாரித்துள்ளது. அவர்களில் புதிய 02 பாடல்களில் சிந்தர் இணைந்து பணியாற்றவுள்ளார். ஒரு பாடலின் நாயகனாகவும், இன்னொரு பாடலை இயக்கி நடிக்கவிருப்பதாகவும் அவர் “குவியம்” இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பதாக அவர் தென்னிந்தியா சென்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் “ஸ்டோன் பெஞ்ச்” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் வைபவ் பிரதான பாத்திரமேற்று நடித்த அப்படம் வெளியானால், தனது நடிப்புத்துறையில் மிகப்பெரிய அங்கீகாரமாகவும், புகழாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.