நண்பா நீ விழித்திடு.. உற்சாகமூட்டும் “தொடுவானம்“ பாடல்

330

நம் நாட்டு இளம் கலைஞர்களின் மற்றுமொரு முயற்சியாக “ஆரோக்கியமான சமுதாயம்“ மிகவும் பெருமையுடன் வழங்கும் “தொடுவானம்” பாடலானது சக்தி தொலைக்காட்சியில் நடைபெறும் Shakthi chat நிகழ்சியின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

பல்துறை இசைக்கலைஞரான துவாரகன் இசையில் நீண்ட காலத்திற்கு பின்னர் வெளிவந்திருக்கின்றது இந்தப்பாடல். பாடலுக்கான வரிகளை டினுஷா காயத்ரி எழுதியுள்ளார். அஃப்ரா லதீப், சிவதாசன் சினேகா மற்றும் ஜெரிசன் ஆகியோர் பாடலைப்பாடியுள்ளனர்.

அப்பாவி மக்களின் அறியாமையைப்பயன்படுத்தி அநியாயங்களும் அழுக்குகளோடும் ஆக்கிரமித்து ஆட்டிப்படைக்கும் தீய சமுதாயத்தை தீயிலிட்டு எரித்து, ஆரோக்கியமான சமுதாயம் ஆணிவேராய் நிலைத்திட அணி திரண்டு ஆர்ப்பரிப்போம் என்ற வரிகளுடன் பாடல் ஆரம்பமாகின்றது.

”ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. ஆளும் வர்க்கம் கூட பட்டினியை ஒழிக்கவில்லை… வீணாகிப்போகுது எம் உழைப்பு. விடையில்லாமல் வேகுது எம் உணர்வு… நண்பா நீ விழித்திடு, தொடுவானம் உனக்கடா தோல்விகள் எதுக்கடா..” இப்படி பாடல் முழுவதுமே அடிக்கோடிட்டு காட்டக்கூடிய உயிர்ப்பான வரிகள்.

இவை நிச்சயம் உற்சாகத்தையும், நெஞ்சுரத்தையும், உத்வேகத்தையும் தரக்கூடிய வரிகள். பாடலாசிரியருக்கு ஒரு சபாஷ்! பாடியவர்களின் குரலும் பாடலுக்குப்பலம்.

மிக சிறப்பான பாடல் வரிகளுடனும்,நேர்த்தியான இசைக் கோர்வையுடனும் வெளி வந்துள்ள இப் பாடலை நீங்களும் நிச்சயமாக பார்த்து, உங்களுடைய ஆதரவையும், ஒத்துழைப்பையும் பாடலுக்கு வழங்குங்கள்.

Music – T.Thuvarakan
Lyrics & Co-ordination – Sunthararajan Dinusha Gayathri
Vocal – Afra Lateeif | Sivathasan Sineka | Joseph Benadict Anthony Jerison
Mixing and Mastering – Dilan Perera (Next Generation Music Studio)
Produced by – Healthier Society ( ஆரோக்கியமான சமுதாயம்)
Cinematography & Editing
Luxman Kabilesh (Cinevilla photography)