விதூஷானின் “நான் ஒரு முட்டாளுங்க” பாடல்

1101

ராப் இசைக்கலைஞர் விதூஷான் நீண்ட நாட்களின் பின்னர் “நான் ஒரு முட்டாளுங்க” என்கிற பாடலுடன் வந்திருக்கின்றார். இளமைத்துள்ளலாக வெளிவந்துள்ள இப்பாடலை எஸ்.என்.விஷ்ணுஜன் இயக்கியுள்ளார்.

பாடலுக்கான ஒளிப்பதிவு அச்சுதன் மற்றும் கிரிஷ் டிலான். படத்தொகுப்பு அபிஷேக். அனிமேஷன் துணை கொண்டு பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறப்பான முறையில் Vfx காட்சியமைப்பை வேணுதரன் தொகுத்துள்ளார்.

பாடலுடன் ஆடலும் இணைந்த இப்படைப்பின் நடன இயக்குனர் அனுஷாந். பாடலில் விதூஷானுடன் சி.ஜே.டுஜா, அனுஷாந் மற்றும் ரபி டான்ஸ் ஆகியோர் தோன்றியுள்ளனர். “நான் ஒரு முட்டாளுங்க” பாடலைத் தயாரித்துள்ளார் குணநாதன்.