பத்மயன் இசையில் மனதை வருடும் “அவளதிகாரம்” பாடல்!

448

Behindwoods இல் அவளதிகாரம்..! ஈழத்தின் சினிமா படைப்புகள் பேசப்பட வேண்டிய களம் இலங்கையை தாண்டி பிரவேசிப்பது அங்கீகாரத்திற்குரிய விடயம்.

ஈழ சினிமா வளர்ந்து தனக்கான கட்டமைப்பை நிறுவி வரும் நிலையில் “குறிஞ்சி கிரியேசன்ஸ்“ நிறுவனத்தின் படைப்புகள் இலங்கை மீடியாக்கள் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் தற்சமயம் வெளியிடப்படுகின்றன. இது இலங்கையிலும் ஒரு சினிமா வேகமாக வளர்ந்து வருகின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றது.

திலக், கெளசி ராஜ் நடிப்பில் கதிர் அவர்களின் இயக்கத்தில், பத்மயன் அவர்களின் இசையிலும், வட்சு அவர்களின் ஒளிப்பதிவிலும் உருவாகியிருக்கும் அழகிய காதல் பாடல் “அவளதிகாரம்”. இந்தப்பாடலை டயாஸ் பாடியிருக்கின்றார். படத்தொகுப்பு – கதிர், ஒப்பனை – அகல்

“குறிஞ்சி கிரியேசன்ஸ்” சார்பில் ஜெனோசன் ராஜேஸ்வர் இந்த படைப்பை தயாரித்து வெளியிட்டிருக்கின்றார்.