நவீன், ரெமோ நிஷா நடிப்பில் ‘காட்டு பயலே’ Cover song

239

சுரேகா சிவகாந்தனின் Zindoor Productions சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது ‘காட்டு பயலே’ Cover Song.

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் வெளிவந்த இப்பாடல் பல மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ள நிலையில், அதற்கு பல Cover versions வெளிவந்திருந்தது. அந்த வகையில் இலங்கையில் இருந்து இப்பாடல் காணொளி வடிவில் வந்துள்ளது.

நவீன், ரெமோ நிஷா நடித்துள்ள இப்பாடலுக்கான ஒளிப்பதிவு ‘ராஜ் மூவீஸ்’ ராஜ், படத்தொகுப்பு கதிர். பாடலுடன் ஆடலும் அமர்க்களமாக இருக்கின்றது. இதற்கான நடன இயக்கம் கண்ணா உதய். இதனைச் சிறப்பாக இயக்கியிருக்கின்றார் பிரபல அழகுக்கலை நிபுணர் சுரேகா சிவகாந்தன்.