ஜெனோசனின் ‘இறகெனும் நினைவுகள்’ – முதற்பார்வை வெளியீடு

455

ஈழ சினிமாவில் நம்பிக்கை தரும் இளம் படைப்பாளி ஜெனோசன் ராஜேஸ்வரின் இயக்கத்தில் பத்மயன் சிவாவின் இசையில் உருவான கவிதைக் கானம் ‘இறகெனும் நினைவுகள்’ இன்று வெளியிடப்படவுள்ளது. இது ‘சினிமா விகடன்’ யு-ரியூப் தளத்தில் வெளியிடப்படும் என அதன் இயக்குனர் அறிவித்துள்ளார். இதன் முதற்பார்வை (first look) நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

தர்ஷன், கெளசி ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இக்கவிதைக் கானத்திற்கு வட்ஸு, தரு கங்காதரன், காயு அம்மு ஆகியோர் குரல் கொடுத்துள்ளார்கள். ஒளிப்பதிவு மற்றும் வரிகள் வட்ஸு, படத்தொகுப்பு கதிர். இன்னும் பல கலைஞர்கள் பணியாற்றியிருக்கும் இப்படைப்பு ஈழ சினிமாவில் வெளிவந்த பல பாடல்களுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.