ரெக்சன் – கீர்த்தி நடிப்பில் “என் இனிய பொன் நிலாவே” பாடல்

342

ரில்கோ புரொடக்ஷன் திலக்ராஜ் தயாரிப்பில் சிறி நிர்மலன் இசையில் கார்த்திக் சிவா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பாடல் “என் இனிய பொன் நிலாவே”.

மூன்று வருடத்திற்கு முன் இசையமைக்கப்பட்ட பாடல் தற்போது லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறது. இதன் வெளியீடு கடந்த 20 ஆம் திகதி யாழ். ரில்கோ ஹோட்டலில் இடம்பெற்றிருந்தது.

“வானில் இருந்து வந்த தேவதை என்னில் காதல் கொண்ட மாயமோ”
சேற்றில் முளைத்த தாமரை என் நெஞ்சில் பூர்த்ததென்ன மாயமோ”

என ஆரம்பிக்கும் இந்தப்பாடலை மதன் எழுதியுள்ளார். பார்த்தீபன் பாடியுள்ளார்.

காணொளியாக வெளிவந்துள்ள இந்த பாடலை கார்த்திக் சிவா இயக்க ரெக்சன் – கீர்த்தி நடித்திருக்கிறார்கள். அஜிபன் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சிந்து அருட்செல்வன் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கின்றார்.

இந்தப் பாடல் உருவாக்கத்தில் அனுபவம் வாய்ந்த பலர் இருக்கிறார்கள். இசையும் வரிகளும் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு மற்றும் வர்ணச்சேர்க்கையும் பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது.

ரெக்சன் – கீர்த்தி நடிப்பில் கவர்ச்சி. ஆடை அலங்காரம், காட்சிப்படுத்தப்பட்ட இடங்கள் (லொகேஷன்ஸ்) மிக அழகாக இருக்கிறன. நடனம், நடிப்பு என ரெக்சனை இயக்குனர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.

தனியே ஒரு டூயட்டாக இது தெரிகின்றது. நாயகன் – நாயகி காதலுக்கு ஒரு திரைக்கதை எழுதி, அதனை படம் பிடித்திருந்தால் இன்னமும் பாடல் பார்ப்பவர் மனதில் நின்றிருக்கும். படப்பிடிப்புக்காக மினைக்கெட்டு மலையகம் வரை சென்றிருக்கின்றார்கள். எனவே, அங்கு மேலும் பல இடங்களை காட்சிகளில் சிறைப்பிடித்திருக்கலாம்.

சிறி நிர்மலன் எத்தனையோ பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். இது ஒரு மெலோடி பாடல். இசை மனதை கவர வைக்க புல்லாங்குழல் இசையை நேரடியாக இணைத்திருக்கலாம்.

இந்த பாடலில் பங்குபற்றிய இசையமைப்பாளரை நேரில் பேசிய போது இந்த பாடல் தனக்கு அதிகம் பிடித்திருப்பதாகவும், மூன்று வருடத்திற்கு முன் இசையமைத்து ஒரு வருடத்திற்கு முன் காணொளியாக்கப்பட்டு தற்போது வெளிவந்திருக்கிறது என்றார்.

ஒரு படைப்பை வெளியிட கலைஞர்கள் பட்ட துன்பம் பார்வையாளர் அறிய வாய்ப்பில்லை. அதற்கு அந்த கலைஞர்களுடன் நேரடியாக பேசவேண்டும்.

வாழ்த்துகள் தொடர்ந்தும் பல கலைப்படைப்புகள் வெளி வரட்டும்.