சன் டி.வி.யின் பிரபல தொடரில் அறிமுகமாகியிருக்கும் RJ நெலு!

1424

சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் “எதிர் நீச்சல்”. இதனை “கோலங்கள்” புகழ் திருச்செல்வம் இயக்கி வருகின்றார். இதில் நம் நாட்டின் முன்னணி இளம் நட்சத்திரமான ஆர்.ஜே.நெலு முக்கிய பாத்திரத்தில் களமிறங்கியிருக்கின்றார்.

அதிரடி அறிமுகத்துடன் அவர் தோன்றும் காட்சி நேற்று (16) ஒளிபரப்பப்பட்டது. இனிவரும் நாட்களில் பேசப்படும் ஒரு நட்சத்திரமாக அவர் சின்னத்திரையில் மிளிர்வார் என்பதில் ஐயமில்லை.

மட்டக்களப்பைச் சேர்ந்த நெலு நடிகராக அறிமுகமாகி ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என கலக்கி வருபவர். பாடல்கள், குறும்படங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என இவர் பணியாற்றிய படைப்புக்கள் ஏராளம்.

அண்மையில் வெளியாகிய “லூஸி“ திரைப்படத்திலும் ஒரு வில்லன் பாத்திரத்தை ஏற்று மிரட்டி இருந்தார். இந்நிலையில் “எதிர்நீச்சல்” தொடரிலும் கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் (கிருஷ்ணா) என வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக களமிறங்கியிருக்கின்றார்.

மறைந்த நடிகர் மாரிமுத்து மூலம் எதிர்நீச்சல் தொடர் பட்டிதொட்டியெங்கும் ட்ரெண்டிங்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.