சந்திரஹாசன் இயக்கத்தில் ‘Case no 447’ படத்தின் டீசர் வெளியீடு

486

சுவர்ணா விஜயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் என்.கே.பிலிம்ஸ் வழங்கும் ‘Case no 447’ என்ற திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தை திரைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட நடிகர், இயக்குனர் ஜெகநாதன் சந்திரஹாசன் எழுதி இயக்குகின்றார்.

இதன் ஒளிப்பதிவு ராதேயன் ஞானப்பிரகாசம், படத்தொகுப்பு அச்லங்கா டிலுக்ஷான், இசை ஹனி நயாகரா.

தமிழ் மற்றும் சிங்களக் கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகிவரும் இப்படத்தில் கலும் ஆர்யன், சுலக்ஷி ரணதுங்கா, சித்தார்த் அபேவர்த்தன, தர்சன் தர்மராஜ், லால் விஜேசிங்க, டிலினி திரிமான்னா, தவராஜா தர்சன், ராஜா கணேசன், கே.சந்திரசேகரன், சாந்தி பானுஷா, நவயுகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தொடக்கவிழா அண்மையில் மிகப்பிரமாண்டமாக இடம்பெற்றதுடன், அன்றே டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் நாடளாவிய ரீதியில் திரையரங்குகளில் இப்படத்தினை கண்டு மகிழலாம்.