Quantity ஐ விட Quality யே முக்கியம் : சொல்லிசைக் கலைஞர் ரத்யா தெரிவிப்பு

603

இலங்கையின் சொல்லிசை கலைஞர் ரத்யா அற்புதராஜா அண்மையில் வெளியிட்ட பாடல் ‘மனிதம்’. தற்சமயம் 15 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து யு-ரியூப்பில் வெற்றி நடை போடுகின்றது.

தமிழ் சொல்லிசைக் கலைஞர்களில் பெண்களின் வகிபாகம் மிகவும் குறைவாக உள்ள சமயத்தில் இலங்கையில் இருந்து ஒரு பெண் ‘ரப்’ இசைக் கலைஞர் ரத்யா என்பது பெருமையே!

இவர் அண்மையில் இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கையில் பல கலைஞர்களும் எத்தனை (quantity) படைப்புக்களை செய்தோம் என்பதிலேயே ஆர்வமாக இருக்கின்றார்கள். ஆனால் அதன் தரம் பற்றி (quality) சிந்திக்கிறார்கள் இல்லை என்ற சாரப்பட ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது ஒரு கலைஞனுக்கு quantity ஐ விட quality யே முக்கியம் என்பதாக… சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தால் அது உண்மை எனதும் மறுப்பதற்கில்லை.

ரத்யாவின் வரிகள் மற்றும் குரலில் ஒலிக்கும் ‘மனிதம்’ பாடலை Akira da rapwolf தயாரித்திருக்கின்றார். ஒளிப்பதிவு – படத்தொகுப்பு தனு ஹரி. எண்ணம் – இயக்கம் எம்.சி.ரா.