தடைகளைத் தகர்த்தெறிய கோடீஸ்வரனின் “வலியோடு போராடு” காணொளிப்பாடல்

2046

DTS Creations தயாரிப்பில் கோடீஸ்வரன் இயக்கத்தில் டினேஷ் திரு சந்தனவின் இசை மற்றும் குரலில் அண்மையில் வெளிவந்துள்ள பாடல் “வலியோடு போராடு”.

இந்தப்பாடலுக்கான அட்டகாசமான வரிகளை எழுதியுள்ளார் ராம்கி. ராப் வரிகளை எழுதிப்பாடியுள்ளார் ஹனுஷியன். பாடல் ஒலிக்கலவை கேஷாந்த்.

காணொளிப்பாடலில் பிரஷாந்த், இம்ரான், கெந்திரன், அட்ஷயா, கிலாசன், ருத்ரா, சுலோ, ஜானு, மகாதேவன், அகிலன், பிரபா, திவானு, கபில், டிஷா, ரிஷி, ஸ்ரீதர், சனோ ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல் ஒளிப்பதிவு புஷ்பகாந்த் ஜி, படத்தொகுப்பு சோனாலி நிமேஷிகா. வர்ணக்கலவை மற்றும் VFX Graphic One Production.

வறுமையில் வாடும் ஒருவன் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாது வாழ்வில் தடைகளை உடைத்து முன்னேற வேண்டும் என்ற விடயத்தை திடமாக உரைக்கும் வகையில் பாடல் அமைந்திருக்கின்றது. வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு..

Director: Kodees
Lyrics : Ramki
Music&vocal : #Dinesh Thiru Sandhana
Rap Vocal&Rap Lyrics: Hanushiyan
Mixing&mastering : Kaeshanth
Cinematography: Pushpakanth.G
Edits: Sonali Nimeshika
VFX,color,poster : Graphic One Production

Cast: Pirashanth | Imran | Kenthiran | Adshaya | Kilasan | Ruthra | Sulo | Janu | Mahathevan | Akilan | Praba | Divanu | Kapil | Disha | Rishi | Srithar | Sano