ராஜ் சிவராஜ் இன் “டக் டிக் டோஸ்” படம் இன்று வெளியாகியது

167
watercolor background in pink color

Black board international தயாரிப்பாக ராஜ் சிவராஜ் இயக்கத்தில் பூவன் மதீசன் இசையில் ஏ.கே.கமலின் ஒளிப்பதிவில் உருவான “டக் டிக் டோஸ்” திரைப்படம் இன்று (08) மகளிர் தினத்தில் இலங்கையில் வெளியாகியுள்ளது.

முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாட்டு திரையிடல் விபரங்களையும் படக்குழு அறிவித்துள்ளது.

“புத்தி கெட்ட மனிதர் எல்லாம்“ என்ற படத்தை தந்த கூட்டணியின் புதிய படமாகிய இதில் மேலும் பல கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இதன் சிறப்புக் காட்சி நேற்று மாலை யாழ். ராஜா திரையரங்கு மற்றும் பருத்தித்துறை எஸ்.எஸ். திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்டது.

அதில் பங்கேற்ற படக்குழுவினர் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் தொகுப்பு 👇