முல்லைத்தீவில் இடம்பெற்ற “மறுக்கப்பட்ட மனிதங்கள்” இசை வெளியீட்டு நிகழ்வு

548

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஒளிரும் வாழ்வு நிலையத்தில் அண்மையில் “மறுக்கப்பட்ட மனிதங்கள்” இசை வெளியீட்டு நிகழ்வு பெரும் எழிச்சியுடன் நடைபெற்றது.

ஈழத்து இசையமைப்பாளர் இசைத்தென்றல் பி.எஸ்.விமலின் இசையிலும், அருந்தவச்செல்வம் வினோத்தின் (யாழ் மருதன்) வரிகளிலும், புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் மு.சுகந்தனதாஸ் அவர்களின் தயாரிப்பு அனுசரணையிலும், இசை எழுவாருதி எம்.பகியின் ஒலிக்கலவையிலும், பாடகி மீரா மதுவின் இனிய குரலாலும் இந்த இசைத்தட்டு சிறப்புற ஆக்கம் பெற்றிருந்தது.

இந்நிகழ்வின் பிரதமவிருந்தினராக தேசபந்து, கலை இளவரசன் வன்னியூர் செந்தூரன் சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் ல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை முன்னாள் உதவி விரிவுரையாளர் செல்வி ஜெ.ஜெயபிரசாந்தி அவர்களும், கிளிநொச்சி கலாலய நாடகக்குழுவின் ஸ்தாபகரும் நடிகருமான பொ.உமாகாந்தன் அவர்களும், அம்பலப்பெருமாள் அ.த.க.பாடசாலை அதிபர் ச.சசிக்குமார் அவர்களும், அகில இலங்கை கிருபா அறக்கட்டளை அதிபரும், கிருபா லேணர்ஸ் தொழிலதிபருமான அ.கிருபாகரன் அவர்களும் பாடலாசிரியர் வன்னியூர் வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இறுவெட்டினை பிரதம விருந்தினர் நாடைவை வெட்டி வெளியிட்டு வைத்தார். முதற்பிரதியினை இறுவட்டின் தயாரிப்பாளரின் பாரியார் திருமதி சுகந்தனதாஸ் வழங்கிவைக்க யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளி பெண்கள் அமைப்பின் செயலாளர் பெற்றுகொண்டார். தொடர்ந்து சிறப்புப்பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் இறுதியில் உறவுகளுக்கு கரம்கொடுப்போம் அமைப்பினரால் மாற்றுத்திறனாளி உறவுகளின் குடும்பங்களுக்கு பெறுமதிமிக்க உணவுப்பொதிகளும் வழங்கப்பட்டது என்பது நல்ல செயற்பாடாகவே அமைந்திருந்தது. இறுதியாக பாடலாசிரியர் அருந்தவச்செல்வம் வினோத் அவர்களின் ஏற்புரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

தகவல் – வன்னியூர் செந்தூரன் முகப்புத்தகம்