சிவி லக்ஸ் இன் இசை மற்றும் குரலில் நல்லூர்க் கந்தனுக்கு சொல்லிசைப் பாமாலை “யாமிருக்க பயமேன்”

124

தமிழன் படைப்பகம் சார்பில் சிவி லக்ஸ் இன் இசை மற்றும் குரலில் நல்லூர்க் கந்தனுக்காக வெளிவந்திருக்கும் பாடல் “யாமிருக்க பயமேன்”.

இந்தப்பாடலுக்கான வரிகளை இணுவை நித்தியதாஸ் எழுதியுள்ளதுடன் சொல்லிசை வரிகளை சிவி லக்ஸ் எழுதியுள்ளார். சிவி லக்ஸூடன் இணைந்து டேஷானி மகேந்திரன் பாடியுள்ளார்.

காணொளிப்பாடலுக்கான ஒளித்தொகுப்பை TN சதீஸ் செய்திருப்பதுடன் பாடல் ஒலிக்கலவையினை சமீல் ஜே செய்துள்ளார்.

கர்நாடக இசை வடிவங்களில் அமைந்த பக்தி பாடல்களுக்கு மத்தியில் சொல்லிசை (ராப்) கொண்டு நல்லை முருகனை அர்ச்சித்திருப்பது ரசிக்க வைக்கிறது.

இசை – சிவி லக்ஸ்
பாடியவர்கள் – சிவி லக்ஸ், டேஷானி மகேந்திரன்
வரிகள் – இணுவை நித்தியதாஸ்
சொல்லிசை வரிகள் – சிவி லக்ஸ்
ஒலிக்கலவை – சமீல் ஜே
தொகுப்பு – TN சதீஸ்
தயாரிப்பு – : ச.க. பிரசாந்த் , ச.க. பிரகாஸ் , ச.க. பிரகாசினி
(தமிழன் படைப்பகம்)