ராதேயனின் “ஆடத்தன்” நாளை ரிலீஸ் – விற்றுத்தீர்ந்தன முதல் நாள் காட்சி ரிக்கெட்டுக்கள்!

193

ராதேயன் ஞானப்பிரகாசத்தின் இயக்கத்திலும் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ள “ஆடத்தன்” திரைப்படம் நாளை (26) வெளியாகவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் (27) மட்டக்களப்பு சுகந்தி திரையரங்கில் இந்தப்படம் காலை 9 மணி மற்றும் மாலை 5 மணி என தலா இரண்டு காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளது.

இத்திரைப்படத்தை பிரமோதயா பிக்சர்ஸ் & ஜி ஆர் மேஜிக் பிக்சர்ஸ் உடன் இருதயராஜன் ஜூலியானா மற்றும் எம்.ஞானப்பிரகாசம் இணைந்து தயாரித்துள்ளனர் .

ஆடத்தன் திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் வரிகள் என்பவற்றை மனோஜ் சிவப்பிரகாசம் எழுதியுள்ளதுடன் நிருக்சன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கிருஷாந்த் சிவப்பிரகாசம் கவனித்துள்ளார்.

பஜிந்திரா, டெனிக் பார்த்தெலோட், யிந்த்ரா, கிரவுன்சன், தர்ஷிக், எல்விஷ் ,சஹாரன், டெவோன், விதுசான், கோபி ரமணனன், சிறிதரன், மனோஜ், எம்.எம்.கரன், விதுஷ், கிரிஷ் தனு, தனஞ்செயன், சேனு, ஞானி, ஜூலியானா, அரசரட்ணம், ராதேயன், பிரயந்தன் மற்றும் பலர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

நாளை முதல் நாள் காட்சிகளுக்கான அனைத்து ரிக்கெட்டுக்களும் விற்றுத்தீர்ந்து விட்டன என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ள இயக்குனர் ராதேயன், 27 ஆம் திகதி காட்சிகளுக்கான வெகு சில ரிக்கெட்டுக்களே மீதமிருப்பதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.