MJ நிதர்சனின் “ரணதீரன்” – விமர்சனம்

303

அண்மையில் வெளிவந்து பலரது மனங்களில் இடம்பிடித்த 33 நிமிட குறும்படம் தான் ரணதீரன். VFX, படத்தொகுப்பு என பல துறைகளை கற்று தேர்ந்து பல படங்கள் குறும்படங்கள் பார்த்து அதன் பயனாக அறுவடையை செய்தவர் இயக்குனர் நிதர்சன்.

மாமுனை எனும் கிராமத்தை சேர்ந்த இளைஞன் இப்படி ஒரு படைப்பை படைத்திருக்கிறார். யாருமே எதிர்பாக்க முடியாத ஒரு படைப்பை வெளியிட்டு வெளிநாடுகளிலும் பெயர் வாங்கியிருக்கிறார். அந்த படைப்பை தற்போது வலையொளி (YouTube) தளத்திலும் வெளியீடு செய்திருக்கின்றனர்.

விறுவிறுப்பான படம். ஆத்தலான நகைச்சுவை. பப்ஜி, பிறிபயர் விளையாட்டு வீரர்கள் போன்ற பாத்திர படைப்பு. என்னை போன்றவர்களுக்கு மாயாவி கதை போன்ற படம்.

மணற்காட்டில் குதித்து இறங்கி வடமராட்சி கிழக்கு ஆழியவளை வரை போனோர் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, சுண்டிக்குளம் போக முதல் ரணதீரன் போட்டு தள்ளிட்டார். ரணதீரனை போட்டு தள்ள எதிர் எதிர் காங்ஸ்டர் கூட்டம் ஒன்று கூடியும் இறுதியில் ரணதீரனால் அழிந்தது. இதுதான் கதை. ஆனால் இயக்குனர் தன்னுடைய ஊரை சொல்லவில்லை.

இந்த படைப்பு அந்த கிராமங்களின் அழகு, கடற்கரை சூழல், வயல்வெளிகள், வீதி என எல்லாமே படைப்பிற்கு ஏற்ப அழகியலோடு பயன்படுத்தி இருக்கிறார். கடற்கரை புட்டி அமைப்பது மாரி காலம் அதெல்லாம் திட்டமிட்டு பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது.
இந்த படைப்பில் படை நகர்வு சம்புகளுக்கூடாக நகர்த்திய நகர்வு அருமையாக இருந்தது. தரையிறங்கிய இடமெல்லோ என்பதை தரையிறக்கி காட்டியிருக்கிறார்.

இந்த படைப்பு நகைச்சுவை குறைவில்லை. ஆண் பாத்திரம் ஒன்றை பெண் பாத்திரமாக்கி எல்லை மீறாமல் சிறப்பாக அமைத்திருந்தார். இயக்குனர் உச்ச அனுபவசாலி.

த்ரிலிங் கூட அதிகம். நாம IGI விளையாடியோர். அந்த விளையாட்டில் பார்த்து நெஞ்சு படபடத்து ஓப் பண்ணி மீண்டும் விளையாடுவோம். அதே போல் கண்ணுக்குள் வெடி. மிக அருமை.

இசையாக இருக்கட்டும், ஒளிப்பதிவாக இருக்கட்டும், தொகுப்பு, vfx என எல்லாவற்றிலும் பின்னி எடுத்திருக்கிறார்.

பின்னணி குரல் வழங்கியவர்கள் மனதுக்குள் நிக்கிறீர்கள். அழுத்தமான, இயல்பான உரையாடல்கள்.

நடிகர்கள் பெண் பாத்திரமேற்றவரும், கிப்பி தலையனும் சொல்லி வேலையில்லை. அப்படி நடிப்பு.

நிதர்சனிடம் முழு நீள படைப்பு தூங்கிட்டு இருக்கும். அதை வெளியீடு செய்யவேண்டும். இயக்குனர் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒருவர். படைப்பு ஆர்ப்பரிக்கிறது. அத்தனை தகுதியும் உள்ளது.

VFX, EDITING, படிப்போருக்கு சிறந்த உதாரணமாக அமையக்கூடிய படைப்பு எனலாம்.

என் ஊருக்கு பக்கத்து ஊர் பையன், என்னூரின் பெயரையும் சொல்லி இருக்கார் எனும் போது எனக்கும் ஒருவித உச்ச சந்தோசம். அழகான படைப்பு, தவற விடாதீர்கள்.

மொத்தத்தில் ரணதீரன் ஒரு ரணகளமான இரவு விருந்து. வாழ்த்துகள் படக்குழுவிற்கு..