தமிழ் – சிங்கள மொழிகளில் ஹிட்டடித்திருக்கும் ஜீசஸ் விக்டரின் ‘செவ்வந்தி’ பாடல்

564

கௌதம் மாறன் இயக்கத்தில் ஜீசஸ் விக்டர் இசையில் ஹிருஷி வசந்துராவின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்துள்ள பாடல் ‘செவ்வந்தி’.

மொடல் அழகியான சகோதர மொழியைச் ஹிருஷி வசந்துரா ‘ஆசிரியை’ ஆக தோன்றிய புகைப்படங்கள் (Model Shoot) தமிழ் – சிங்கள இளைஞர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தமிழ் – சிங்களத்தில் உருவான இந்தப் பாடலுக்கு அவரையே நடிகையாக்கி சொல்லி அடித்திருக்கின்றார்கள் பாடல் குழு.

இந்தப் பாடலுக்கான தமிழ் வரிகள் எம்.ஏ.மரியன், குரல் அரவிந்த் கர்னீஸ்வரன், சிங்கள வரிகள் சாலிக பண்டார திசாநாயக்க, குரல் ஹர்ஷா மதுரங்க. மேலும் பல இசைக்கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவான இப்பாடலுக்கான இசைக்கலவை சுரேஷ் பெருமாள் (சென்னை).

காணொளிப்பாடலிற்கான ஒளிப்பதிவு டிரோஷான் அழகரட்னம், படத்தொகுப்பு கௌதம் மாறன், வி.எப்.எக்ஸ் மற்றும் கூடுதல் படத்தொகுப்பு ஸ்ரீ துஸிகரன். பாடலில் ஹிருஷியுடன் இணைந்து மதன் கே. மற்றும் ஜது ஆகியோர் தோன்றி நடித்துள்ளனர்.

பாடலுக்குள் ஒரு கதையை வைத்து வித்தியாசமாக திரைக்கதை அமைத்து இயக்கி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கின்றார் கௌதம் மாறன்.