யாழில் ஹரிகரனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!

442

உலகப்புகழ் பெற்ற இந்தியாவின் பிரபல பின்னணிப்பாடகர் ஹரிகரன் பங்குபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர இரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பிலான தகவலை யாழ். தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தென்னிந்தி பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் தெரிவித்தார். இந்த நிகழ்வை தலைமையேற்று நடத்தப்போவதும் அவரே!

குறித்த நிகழ்வில் பல வெள்ளித்திரை, சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளதாவும், அவர்கள் தொடர்பிலான அறிவிப்பு ஒவ்வொரு வாரமும் “சப்ரைஸ்”ஆக வெளிவரும் எனவும் அவர் அறிவித்தார்.

அத்துடன், இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் பிரபல நடிகை குஷ்பு ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளதாகவும் கலா மாஸ்டர் தெரிவித்தார்.

மேலும், யுத்தகால சூழல் மற்றும் கொரோனா தாக்கங்களில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய வடக்கு, கிழக்கு மக்களின் மத்தியில் அவர்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் விதமாக எந்தவொரு செயற்பாடுகளோ கலை நிகழ்வுகளுடன் நடைபெற்றுள்ளது எனக்கூற முடியாது.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு சிறந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாகவும் Magick Group இன் யாழ் வருகையை பிரபல்யப்படுத்தும் நோக்கோடும் பாடகரும் இசையமைப்பாளருமான ஹரிகரன் தலைமையிலான இசை நிகழ்ச்சி ஒன்றினை NorthernUni யாழ்ப்பாணத்தில் வழங்கவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியை முற்றுமுழுதாக இலவசமாக எமது மக்கள் கண்டுகளிக்க முடியும் எனவும் இன் நிறுவுனர் இந்திரன் பத்மநாதன் தெரிவித்தார்.