தமிழர் விளையாட்டு பாரம்பரியத்தை தலைமுறையினருக்கும் கடத்தும் “கபடி” பாடல்

150

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. அதுக்கு உதாரணமே நம்ம பாட்டன், முப்பாட்டன் தான். அவங்க நம்ம தலைமுறைக்கு விட்டுச் சென்ற பெரிய சொத்து “வீரம்”. முரட்டுத்தனமான நம்ம வீரத்தை விளையாட்டாவும் கொடுத்தங்க, அப்பிடிப்பட்ட வீர விளையாட்டுத்தான் “கபடி”.

கபடி நம்ம அடையாளம்!

கபடி நம்ம கலாசாரம்!

கபடி நம்ம நாடி, நரம்பெல்லாம் ஊறி இருக்கின்ற கலை!

இப்படி ஆரம்பிக்கின்றது ராதேயனின் “கபடி“ பாடல். உண்மை தான். எங்கள் முன்னோர்களின் விளையாட்டுக்களில் எல்லாம் வீரம் நிறைந்திருந்தது. புத்தியுடன் சக்தியையும் சேர்த்தே பயன்படுத்தினார்கள் அவர்கள். இந்தப்பாரம்பரியம் எல்லாம் எதிர்கால தலைமுறையினருக்கு ஊடு கடத்தப்பட வேண்டுமாயின் நிச்சயம் அது சினிமாவால் தான் முடியும். அதைச் சரியாக செய்திருக்கின்றார்கள் மட்டக்களப்பு கபடி குழு மற்றும் இயக்குனர் ராதேயன்.

இந்தப்பாடலுக்கான இசையை கே.கே. அமைத்துள்ளதுடன், வித்தகன் – கோவிதா ஆகியோர் பாடியுள்ளனர். வில்லியம் தர்மேந்திரா இதனைத் தயாரித்துள்ளார்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வரைகலை, வர்ணச்சேர்க்கை என இயக்கத்திற்கு மேலாக இந்தப் பாடலில் பெரும் பணி புரிந்திருக்கின்றார் ராதேயன் ஞானப்பிரகாசம். அவரின் முயற்சி போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள் கபடி டீம்.