சுதர்ஷன் இசையில் அன்புவின் இயக்கத்தில் “அத்தினி” பாடல்

455

எஸ். கந்தசாமி, சி.சுதர்சன் ஆகியோரின் தயாரிப்பில் லோககாந்தனின் கதை மற்றும் வடிவமைப்பில் ரி.அன்புவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள காணொளிப்பாடல் “அத்தினி”.

இந்தப்பாடலுக்கான வரிகளை ஸ்ரீவிஜய் எழுதியிருப்பதுடன், கனடாவைச் சேர்ந்த சி.சுதர்சன் இசையமைத்துள்ளார். சூப்பர் சிங்கர் புகழ் ஆனந்த் அரவிந்தாக்ஷன் பாடியுள்ளார்.

அத்தினி பாடலுக்கான ஒளிப்பதிவை தசாங்கன், பரதன் மற்றும் ஆர்.ஜே.நெலு ஆகியோர் மேற்கொண்டிருப்பதுடன், படத்தொகுப்பு மற்றும் வர்ணச்சேர்க்கை பணிகளை Rajestone studio மேற்கொண்டுள்ளது.

லோககாந்தன், ஹர்ஷி ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடித்திருப்பதுடன், பரதன், தசாங்கன், ஆர்.ஜே.நெலு, சுவிகரன் மற்றும் சீலன் ஆகியோரும் பாடலில் நடித்துள்ளனர்.