மானசியுடன் கைகோர்த்த “Rap Ceylon” – ட்ரெண்டிங்கில் “கனவு தேவதை”

524

இலங்கை – இந்திய கலைஞர்கள் இணைந்து படைத்துள்ள “கனவு தேவதை” பாடல் யு-ரியூப்பில் வெற்றி நடை போடுகின்றது.

சூப்பர் சிங்கர் புகழ் மானசி அவர்களின் குரலில் இலங்கையில் தற்போது பல சிறந்த பாடல்களை வழங்கிவரும் இசையமைப்பாளர் திசோன் விஜயமோகனின் இசையில், வாகீசன் இராசையாவின் அனல் பறக்கும் வரிகளில் இந்த பாடல் வெளிவந்திருக்கின்றது.

இப் பாடலில் அட்விக் உதயகுமார் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதுடன், ரெஜி செல்வராசாவின் ஒளித்தொகுப்பு மிகச்சிறந்த முறையில் உள்ளது. இதன் ஒளிப்பதிவை மட்டுமல்லாது பாடலையும் அழகுற இயக்கி, படத்தொகுப்பு பணிகளையும் அவரே மேற்கொண்டுள்ளார்.

இப் பாடலுக்கான வடிவமைப்பு மற்றும் புரோமோசனை மதுஸ் அவர்கள் வழங்கியுள்ளதுடன் இப் பாடலினை கனடா தமிழ் பசங்க நிறுவனத்தின் தேனுசன் மற்றும் சிந்துசன் தயாரித்துள்ளதோடு‌ இப்பாடலில் பணியாற்றிய பிற கலைஞர்களும் சிறப்பாக தங்கள் பணிகளை செய்துள்ளனர்.

இந்த கனவுதேவதை குழுவினருக்கு (RAP CEYLON) வாழ்த்துக்கள்.

Music Composed & Arranged : Thishon Vijayamohan ( Max Studio )
Rap & Lyrics : Vaaheesan Rasaiya
Voice : Maanasi.K, Thishon ( Recorded @ Loyola college studio )
Act On scene : Advik Uthaiyakumar
Percussion : Bhanu Octapad ( Recorded @ Max Studio )
Mix & Master : Pathmayan Sivananthan ( 10Studio )
Direction DOP Edit : Reji Selvarasa ( Ilankeyan Pictures )
Associate Director : Thamizh ( India )
Publicity Designer : Mathus ( Graphicsfy)
Producer : Thenushan | Sinthusan Tharmaseelan ( Canada Tamil Pasanga )