செல்வராஜ் தனுஷனின் “குவாட்டர்” குறும்படம்

789

பைரவா புரொடக்ஷன் தயாரிப்பாக Trm Picture Canada வெளியீடாக செல்வராஜ் தனுஷனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள குறும்படம் “குவாட்டர்”.

இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ஸ்ரூடியோ திலக் மேற்கொண்டிருப்பதுடன் படத்தொகுப்பு, Vfx & Di பணிகளை Nova Designs கவனித்துள்ளது. விக்னேஷ் Pai இசையமைத்துள்ளார்.

Sj லைபன், விதுஷன், கயன், அன்டன், நிகிர்ஷன், ரொஷான், துஷ்யந்தன், கலைசெல்வன், விஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் நினைவற்ற ஒருவனை வைச்சு தான் நினைச்சதை ஒருவன் செய்திருக்கிறான். இசை படத்தை பார்க்க வைக்குது.

மனநிலை மாறிய ஒருவன், வீட்டால் துரத்தப்பட்ட ஒருத்தன், பாதிக்கப்பட்ட ஒருத்தன் இப்படியானோரை வைத்து முதலாளிகள், அதிகாரம் பணம் படைத்தோர் தம் இலக்கை அடைய பயன்படுத்தலாம். இதுதான் இன்று போதைவஸ்தில் பயன்படுத்தப்படும் உத்தி. இயக்குனர் இதைக் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது.

நம்பிக்கை தரக்கூடிய தொழில்நுட்பக்குழு படத்தில் இணைந்திருக்கின்றது. எமது கள யதார்த்தத்திற்கு ஏற்ப திரைக்கதையை வலுப்படுத்தினால் இவர்களால் இன்னும் சிறப்பான சினிமாவைத் தரமுடியும். வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு..