“வாழ்க்கை வாழ்றதுக்கு” – சங்கீர்த்தனின் அட்டகாசமான பாடல் “வாழ்”

1022

“வாழ்க்கை எங்களுக்கு கிடைச்சதொரு அற்புதமான பொக்கிஷம். நாங்க தான் தேவையில்லாம அதை குழப்பகரமானதாக மாத்துறது. வாழ்க்கை என்கிறது வாழ்றதுக்கு. சந்தோஷமா வாழுவம்” என்று சொல்லிப்போகிறது சங்கீர்த்தனின் “வாழ்” பாடல்.

I CAN Studios தயாரிப்பில் Jaffna Zero Budget Films உடன் இணைந்து வெளியிட்டிருக்கும் பாடல் “வாழ்”. இதனை இயக்கியதோடு மட்டுமல்லாமல் இசையமைத்துப்பாடியுள்ளார் சங்கீர்த்தன். பாடல் வரிகள் சபாஸ்கரன்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வர்ணச்சேர்க்கை என அசத்தியிருக்கிறார் ஷைரஜன்.

எம்மவர் பாடல்களில் இத்தனை அழகாக மலையகத்தின் வனப்பை இதற்கு முன்னர் காட்டியிருக்கின்றார்களா? என்றால் அது சந்தேகம் தான்! மலைகளும், வளைவுகளும், தேயிலைச் செடிகளும், காடுகளும், அருவிகளும் கொள்ளை அழகு. ஒளிப்பதிவில் அட்டகாசமாக ட்ரோனையும் கையாண்டிருக்கின்றார் ஷைரஜன்.

மலைநாட்டினூடான தன் பயணப்படலில் எங்களையும் தன் குரல் மூலம் அழைத்துச் செல்கிறார் சங்கீர்த்தன். பாடலுக்கு பாடல் தன் குரலால் கிரங்கடிக்கிறார். “வாழ்” என்கிற கான்செப்டில் பார்ப்போரையும் அனுபவித்து வாழத்தூண்டும் அவரது இயக்கம் அருமை. மொத்தத்தில் பாடல் குளிர்மை.

Produced by I CAN Studios
In Association with Jaffna Zero Budget Films
Music Composed, Arranged, Sung & Directed by Shangeerththan
Lyricist – Sabaskaran
Cinematography, Edit, D.I & Poster Design – Shyrajan
Pro – Sathu Siva
Subtitles – Nivasheni Balenthiren

Musicians
Acoustic guitar & Bass – Muhammed Huzzain
Flute – Sreerag
Keys & Strings programming – Arosh
Whistle – Smith Asher Maximus
Title Card Piano – Thishon Vijayamohan
Mixing & Mastering – Pathmayan Sivananthan (10 Studios)