ராதேயன் இயக்கத்தில் வீணாவின் “மாற்றான் வாக்கு” பாடல்

191

“மை நேம் இஸ் வீணா நான் மட்டக்களப்பு பெண் தான் …” எனும் குறும்பாடலின் மூலம் பலரது கவனத்தையும் பெற்றவர் வீணா AE. சொல்லிசைக் கலைஞரான இவர் தற்சமயம் “மாற்றான் வாக்கு” எனும் பாடலை எழுதி, பாடி வெளியிட்டிருக்கிறார்.

ஆரோஷ் அவர்களின் இசையமைப்பிலும் ராதேயன் அவர்களின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்திலும் வெளிவந்த மிகவும் அட்டகாசமான இப்பாடலானது பாடல் வரிகள், இசையமைப்பு, பாடிய விதம், சொல்லிசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்தும் பாராட்டும் படி உள்ளது.

மேலும் பிரவிந்த் அவர்களின் கலை இயக்கமும், ருபேந்தினி அவர்களின் ஒப்பனையும் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

குவியம் விருதுகள் 2023 இல் சிறந்த பெண் சொல்லிசைக்கலைஞர் விருதை வென்ற வீணாவின் ஒவ்வொரு படைப்பும் வித்தியாசமான சிந்தனைகளுடன் சிறப்பாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Music: Arosh Camiulas
Concept & Featuring: Veena AE
Visual Direction, DOP & Edit: Ratheyan GR
Lighting: Pravinth
MUA: Rubenthini
Title Design: GR Magic Pictures
Publicity Design: Charan Bawan