“பிக் பாஸ்” சீசன் – 04 இம்முறையும் இலங்கைப் போட்டியாளர்கள் உண்டா?

405

விஜய் தொலைக்காட்சியின் “பிக் பாஸ்” சீசன் – 04 ஐ பற்றியத் தான் இப்பொழுது பலரது பேச்சும். கொரோனாவால் முடங்கியிருந்த பல ரியாலிட்டி ஷோக்கள் இப்பொழுது தான் சிறிது சிறிதாக ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றது போல பார்வையாளர்களை நிறுத்தி வெறும் போட்டியாளர்களுடன் “பிக் பாஸ்” நிகழ்ச்சியை நடத்துவதற்கு விஜய் டி.வி. நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

கடந்த “பிக் பாஸ்” சீசன் – 03 இல் இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினி லொஸ்லியா மற்றும் மொடல் அழகன் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றனர். இதனால் ஈழத்தமிழர்களிடையே அந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விளம்பர ரீதியிலும் விஜய் டி.விக்கு அது வெற்றிகரமான நிகழ்ச்சியாக அமைந்தது.

இம்முறை சீசன் – 04 இல் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்பது தான் மிகப்பிரதானமான கேள்வியாக உள்ளது. அதிலும் கடந்த முறை போல யாராவது இலங்கைப் பிரபலங்கள் பங்குபெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது. ஆனால், இதுவரை வந்த தகவல்களின் அடிப்படையில் அதற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

அப்படியானால் யாரெல்லாம் பங்கேற்பார்கள்? நடிகை சுனைனா “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, வனிதா – பீட்டர் போல் சர்ச்சையில் பேசப்பட்ட சூர்யா தேவி என்பவரும் இணையவிருப்பதாக பேசப்படுகிறது.

அதேபோல “நீயா நானா” கோபிநாத், ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, ஷிவானி நாயர், புகழ், கிரண் ரதோட், டி.வி. தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் மேலும் சிலரும் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பல சர்ச்சைகளுக்கு சொந்தமான “பிக் பாஸ்” நிகழ்ச்சி பலரின் புகழை குன்றச் செய்ததுடன், சிலரின் புகழை உயர்த்தியும் உள்ளது. எனவே, இனிவருங்காலங்களில் பங்கேற்பாளர்களிடம் செயற்கைத் தன்மை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியே, “பிக் பாஸ்” சீசன் – 04 எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் இடம்பெறும் என தெரிகிறது.