‘ஒழுங்கான களம் எமக்கில்லை’ – ‘ஒற்றைச்சிறகு’ இயக்குனர் ஜனா மோகேந்திரன் ஆதங்கம்

1095

கிழக்கிலங்கையில் இருந்து உருவாகிவரும் ‘ஒற்றைச்சிறகு’ முழு நீளத்திரைப்படத்தின் முதற்பார்வையை (first look) பிரபல அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் எதிர்வரும் 22 ஆம் திகதி வெளியிடவுள்ளார். இந்நிலையில், படம் குறித்தும் தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்தும் அதன் இயக்குனர் ஜனா மோகேந்திரன் குவியத்துடன் பகிர்ந்து கொண்டார்.

கேள்வி – உங்களைப் பற்றிய அறிமுகம் ஒன்றைத் தாருங்கள்…
பதில் – என் பெயர் ஜனா மோகேந்திரன். மாணவ பருவத்திலிருந்து குறும்பட Projects பாடசாலையில் செய்துவந்த நான் தற்போது சினிமாத்துறையில் தடம் பதிக்க வேண்டுமென இயக்குனராக முயற்சி செய்துவருகிறேன். அதன் விபரீத விளைவுகளே என் மூலமாக வரும் படைப்புகளாகும்…

கேள்வி – ‘ஒற்றைச்சிறகு’ படத்தின் ஆரம்பம் + அதில் நீங்கள் இணைந்த விதம், இயக்குனராக உங்கள் பணி குறித்துக் கூறுங்கள்…
பதில் – இலங்கை வாழ் ஒருசிறகில் சிறகடிக்கும் ஒவ்வோர் பெண்ணின் வலிகளே இக்கதை… இது நான் எழுதிய மூன்றாவது கதை கந்தையாஇராசநாயகம் / கந்தையா கோணேஷ்வரன் ஆகிய இரு நல்ல உள்ளங்களாலேயே தற்போது திரைப்படமாகிறது.

“மறைபுதிர்” எனும் குறும்பட வெற்றியின் பின் ஒற்றைச்சிறகை குறும்படமாக படைக்க தயாரானேன். ROHAD FILMS மூலம் அது திரைப்படமாகவே உருவெடுத்தது. இத்திரைப்படத்தில் நான் கதை, திரைக்கதை, வசன மற்றும் இயக்கம் என்பவற்றை மேற்கொள்கிறேன்.

கேள்வி – ஒற்றைச்சிறகு படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடவும்..
பதில் – “ஒற்றைச்சிறகு” திரைப்படத்தில் திறன்வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிகின்றனர். பல சிங்கப்பெண்கள் பணிபுரிகின்றமை வரவேற்கதக்க விடயம். ஓர் பெண்ணிண் காவியம் என்பதால் பெண்களே அதிகம் பணியாற்றுகின்றனர்..
நடிகர்களாக முக்கிய பாத்திரத்தில் விதுசா/ ஜனா ரவி/ அகல்யா/ குழந்தை நட்சத்திரம் யுதிஷ்டன்/ கிருபா/ குஜேந்தன்/ முரளி/ திலக்/ ஆகிஷ் உதய்/ சந்துரு/ கேனுரதன்/ தவராஜா/ பிரியா/

சிறப்பு தோற்றத்தில் பூர்விகா ராசசிங்கம் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு – அகல்யா David/ JANARJ
படத்தொகுப்பு – அபிஷேக் (A1 STUDIO)
DI – அன்ஜெலோ ஜோன்ஸ் (கோமாளி கிங்ஸ் படத்தொகுப்பாளர்)
இசை – கிஷாந்த்
பின்னணி குரல் பதிவு – “அ” கலையகம்
ஒலிக்கலவை – Thineshna
ஒப்பனை – தக்ஷி/ கிருபா
பாடலாசிரியர்கள் – நண்பன் லோஜி, லின்ரா(மூதூர்)
பாடகர்கள் – விதுஷா, டிலானி, Chayan
உதவி இயக்குனர்கள் – சந்துரு , குஜேந்தன்
மக்கள் தொடர்பு – தவமுரளி
Subtitle – பிரியா H நடேஷபிள்ளை

கேள்வி – படப்பிடிப்பு எந்தளவு முடிந்துள்ளது + எப்போதும் வெளியிடத்திட்டம்?
பதில் – படப்பிடிப்பு மற்றும் பாடல் ஒலிப்பதிவு நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது படத்தொகுப்பு நடைபெறுகிறது.
October முதல் வாரத்தில் வெளியிட பேச்சு நடைபெறுகிறது. இறுதி தீர்மானம் 2nd Look Poster வெளியீட்டில் கூறுவோம்…

கேள்வி – திரைத்துறையில் எதிர்கொண்ட + எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துக் கூறுங்கள்
பதில் – இந்திய சினிமா மோகத்துக்குள் சிக்குண்ட இலங்கை மற்றும் உலகத்தமிழகளை எம்பால் ஈர்க்க வைத்து நம் படைப்பை வெளியிடுவது கடினமாக இருந்தது. இருப்பினும் தற்போது இலங்கையில் தரமான படைப்புகள் Digital தொழிநுட்பத்தால் சாத்தியமாக்கி விட்டது. ஆகையால் இனி ஆதரவு கிடைக்கலாம் இருப்பினும் நம் படைப்பும் தரமானதாக வழங்க வேண்டும்…
ஊடகங்கள் நம்மவர் படைப்பை ஆதரிக்க இன்னும் நேரத்தை அதிகரித்து ஊக்கவிக்க வேண்டும்.

ஒழுங்கான களம் எமக்கில்லை, ஒவ்வோர் கலைஞனும் வாழ்வாதாரத்துக்கு ஏதோ ஓர் தொழிலை மேற்கொண்டுதான் கலைத்துறையை நேசிக்கிறான். அவன் படைப்பை செய்கிறான். தயாரிப்பாளர்கள் முன்வரல், தொழிநுட்ப வசதிகள் அதற்கேற்ற செலவுகள், வேதனம் அனைத்தும் சவாலாகவே உள்ளது.
அனைத்திற்கும் மக்கள், நம் சொந்தங்கள் ஆதரவை தந்தால் நட்டம் வந்தாலும் நாம் முன்னேறி செல்வோம்.