பல்வேறு விருதுகளை வென்ற கதிரின் “நிலம்” குறும்படம் வெளியாகியது

520

நோர்வே தமிழர் திரைப்பட விழா, மெட்ராஸ் சுயாதீன திரைப்பட விழா, பாரிஸ் சர்வதேச திரைப்பட விருதுகள், யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற கதிரின் இயக்கத்தில் உருவான “நிலம்” குறும்படம் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

லிஃப்ட், சுதன்ராஜ் தயாரிப்பில் ஓரங்கம் வலைத்தளத்தில் வெளிவந்திருக்கும் இந்தக் குறுப்படத்திற்கான ஒளிப்பதிவை ரிஷி செல்வம் மேற்கொண்டிருப்பதுடன் படத்தொகுப்பு பணிகளை ரெஜி செல்வராசா கவனித்துள்ளார். பத்மயன் சிவா இசையமைத்துள்ளார்.

கலை இயக்குனராக கலாமோகனும், தயாரிப்பு முகாமையாளராக பரத் பஞ்சாட்சரமும் பணியாற்றியுள்ளனர். ஒலிப்பதிவு பணிகளை வாகீசன் ஆனந்த் மற்றும் ஜெயந்தன் விக்கி ஆகியோர் கவனித்துள்ளனர்.

கிஸ்மின், நிதுர்சன், கனகரட்னம், இதயராஜ், புஷ்பராணி சத்யா, பவுண், அம்பிகா, ஜீவேஸ், மகேந்திரசிங்கம், கதிர் சாகித்யா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

குறும்படம் குறித்த விமர்சனம் பிறிதொரு பதிவில் வெளியாகும்.