பிரணா நாயகியாக அறிமுகமாகும் “இளமை எனும் பூங்காற்று” படத்தின் டீசர் வெளியீடு

171

இலங்கை – திருகோணமலைச் சேர்ந்தவரான நடிகை பிரணா, நம் நாட்டில் பல பாடல்களிலும் குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

(அவரைப்பற்றிய சிறு அறிமுகத்தொகுப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்)

நடிகை பிரணா நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் மற்றும் விடா முயற்சி காரணமாக தென்னிந்தியா சென்று சின்னச்சின்ன வேடங்களில் நடித்து இன்று கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள “இளமை எனும் பூங்காற்று” படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது.

படம் வெளியாகும் போது நிச்சயம் இது நடிகை பிரணாவுக்கு திருப்பு முனையாகவிருக்கும்.

நடிகை பிரணா “மாஸ்டர்” படத்தில் தளபதி விஜய்யுடனும், “அண்ணாத்த” படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனும் நடத்துள்ளதுடன் விஷால், விமல் என வேறு பல நாயகர்களின் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சினிமா பயணம் சிறக்க குவியம் இணையத்தின் வாழ்த்துக்கள்.