M.F.ஜோன்சன் குழுவினரின் கடும் உழைப்பில் உருவான ‘தாயுமானவன்’ பாடல்

984

PML மீடியா செல்வா முகுந்தன் தயாரிப்பில் M.F.ஜோன்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள மனதைக் கலங்கடிக்கும் பாடல் “தாயுமானவன்”. வெறுமனே இதைப் பாடலாக மட்டுமில்லாமல் அதற்குள் ஒரு திரைக்கதை அமைத்து சிறு குறும்படமாகவே காட்சிப் படுத்திவிட்டார் இயக்குனர்.

தாயுமானவன் பாடலின் பெரும் பலமே பத்மயனின் இசையும், மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்த ஜோன்சனின் நடிப்பும்.. இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜெயித்துவிட்டார் ஜோன்சன்.

பாடலின் இன்னொரு முக்கியமான நபர் ஒளிப்பதிவு மற்றும் இயக்குனராக பணிபுரிந்திருக்கும் வின்சன் குரு. ஒளிப்பதிவில் நிறைந்த அனுபவங்களை கொண்டிருக்கும் இவர் ஒளித்தொகுப்பாளராகவும் மிளிர்ந்திருக்கின்றார்.

ஜோன்சன், ரொபேட், நிலக்சன், றஜீவன், யாழ்.யசிதரன், பிஸ்மார்க், குட்டி, யர்வின், மேரி, சர்மி, ரெமோ நிசா உள்ளிட்டவர்கள் சிறப்பாக நடித்திருக்கும் இப்பாடலுக்கான ஒப்பனை அன்ட்ரூ யூலியாஸ்.

செல்வா முகுந்தன் வரிகளில் உருவான பாடலை ராம் ரமணன், சங்கீதன், ஸ்ரெபினி, சாசா செரீன் ஆகியோர் பாடியுள்ளனர்.

காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் நகரும் இந்த கதைப்பாடலை நீங்களே ஒருமுறை பாருங்கள். நிச்சயம் நீங்களும் பாராட்டுவீர்கள்.

மறைந்த ஈழத்தின் முதுபெரும் திரைக்கலைஞன் கேசவராஜனுக்கு தாயுமானவன் பாடலை சமர்ப்பித்திருக்கின்றமை இத்திரைக்கலைஞர்களின் ஈழ சினிமாவின் நேசத்தையும், நன்றியுணர்வையும் காட்டி நிற்கின்றது.