இணையத்தில் வெளியாகியது எம்.ஜே.நிதர்சனின் “ரணதீரன்”

620

எம்.ஜே.நிதர்சனின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, VFX, SFX மற்றும் இயக்கத்தில் உருவாகி இலங்கையிலும் கனடாவிலும் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்ற “ரணதீரன்” திரைப்படம் அண்மையில் யு-ரியூப்பில் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் வினோயன், புகலரசன், கிளாரன்ஸ், ஆர்.லஜீபன், விதுஷன், அபிரன், எம்.முரளிதரன், சுயந்தன், அருள்ராஜ், ஜதீஷன், ராம் கபிலன், மாதுமலர், செந்தூரன், தமிழ் குமரன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றார்கள்.

பப்ஜி விளையாட்டை மையப்படுத்தி அதிகளவு மோஷன் கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அனைத்து கிராபிக்ஸ் காட்சிகளையும் எம்.ஜே.நிதர்சனே வடிவமைத்துள்ளார். இசை – பிரான்சிஸ் ஜெனா, வசனங்கள் எஸ்.லெஜிந்தன் & எம்.முரளிதரன்.