RJ நெலுவின் ‘லவ் குலேட்டர்’ பாடல் மே 21 ரிலீஸ்

824

நடிகர், இயக்குனர் ஆர்.ஜே. நெலுவின் இயக்கத்தில் ஜொனாவின் இசையில் உருவான ‘லவ் குலேட்டர்’ பாடல் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக பாடல் குழு அறிவித்துள்ளது.

ஹேரத் கதிரின் வரிகளில் உருவான இந்தப் பாடலை பகீர் மோகன் பாடியுள்ளார். பாடலுக்கான ஒளிப்பதிவு தேவா ரஜீபன். படத்தொகுப்பு ஆர்.ஜே.நெலு.

இந்தக் காணொளிப்பாடலில் நெலுவுடன் ப்ரஷா மகாராஜன், தினு, ஜெனிதன், திக்‌ஷனன், ஆர்.எபி, பவிதன், இம்ரான் ஆகியோர் நடித்துள்ளார்கள். விரைவில் வெளியாகவுள்ள இப்பாடலுக்கு எமது வாழ்த்துக்கள்.