இளையவர்களுக்கு படிப்பினையாகும் விதூஷானின் Sorry Amma பாடல்

146

LERO Productions சார்பில் Lerociyan TJ தயாரித்துள்ளா பாடல் “Sorry Amma”. ராப் இசைப்பாடகர் விதூஷானின் இசை ஒழுங்கமைப்பு, வரிகள் மற்றும் குரலில் உருவான இந்தப்பாடலுக்கு டரில் டியூக் இசையமைத்துள்ளார்.

அச்சுதன் அழகுதுரையின் ஒளிப்பதிவிலும் கணேசலிங்கம் புஷ்பகாந்தின் படத்தொகுப்பிலும் வெளியாகியுள்ள இந்தக் காணொளிப்பாடலை எஸ்.என்.விஷ்ணுஜன் இயக்கியுள்ளார்.

லோஜினி மகேந்திரா, சுபாஷ் ரேமியன், புஷ்பகாந்த், தினு மகேந்திரன், திலோஷன், எபி, டுஜா, விதுர்ஷன், ரெஜூஸ், இளங்கோ, அனுஷாந், ஜூட் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்பாடலில் கோடீஸ்வரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தவறான வழிக்குச் செல்லும் இளையவர்கள், குறிப்பாக காங்ஸ்டர் வழியில் பயணிப்பவர்களுக்கு படிப்பினையாக தாய் – மகன் உறவை மையப்படுத்தி இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. மெலடியாக ஆரம்பித்து ராப்பில் அதகளம் பண்ணி முடித்திருக்கின்றார் விதூஷான்.

Music by – Darryl Duke
Composed / lyrics/ Sung & Rap by – Vidu Shaan
Mixed & Mastered – Thinesh Na
Dop – அச்சுதன் அழகுதுரை
Edit – Ganesalingam Pushpakanth
Colour grade – Thanush co pilot (grades by thanush)
Direction – S.N. Vishnujan