“ஆபத்தாண்டவன்” திரைப்படம் நாளை மாங்காடு கிபேஸ் திரையரங்கில் வெளியீடு

394

மட்டக்களப்பு கலைஞர்களின் முற்றுமுழுதான பங்குபற்றுதலுடன் தயாரிக்கப்பட்ட “ஆபத்தாண்டவன்” திரைப்படம் கடந்த மார்ச் 6 ஆம் திகதி மட்டக்களப்பு – சுகந்தி திரையரங்கில் திரையிடப்பட்டு அமோக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், நாளை மாங்காடு – கிபேஸ் திரையரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மாலை 5 மணி காட்சிக்கான அனுமதி சீட்டுக்களை பெற்று கொள்ள 0752322880 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

ஆதி திரு, ஜெனா ரவி, விஷ்ணுஜன், துஷி மயூரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கான படத்தொகுப்பு மற்றும் இசைப்பணிகளை கிஷாந்த் கவனித்துள்ளார். ஸ்கிறீன் எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஜதிஜன் இயக்கியுள்ளார்.