நாளை முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில் மாதவனின் “சொப்பன சுந்தரி”

156

மாதவன் மகேஸ்வரன் இயக்கத்தில் கஜானன், ஜோயல் க்ரிஷ், நரேஷ் நாகேந்திரன், மாதவன், தனுஷன் , வருண் துஷ்யந்தன், ஜெனோஷன், நிரஞ்ஜனி ஷண்முகராஜா, பேர்லிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான “சொப்பன சுந்தரி” திரைப்படமானது நாளை (25) வெளியாகின்றது.

ஒரே நாளில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள திரையரங்குகளில் இந்தப்படம் வெளியாகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. திரையரங்குகளின் விபரம் 👇

📍 Savoy 3D – Wellawatte
📍 Concord – Dehiwala
📍 PVR Cinemas – Colombo
📍 Regal – Dematagoda
📍 Regal – Jaffna (Cargills Square)
📍 Nelson – Trincomalee
📍 GK Cinemax – Kalmunai
📍 Amutha Cinema – Vavuniya

சினிமாத்துறையில் நீண்ட காலம் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இளம் கலைஞர்களின் ஒன்றிணைவில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கான ஒளிப்பதிவினை சமல் எச் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளார்.

ஜீவானந்தன் ராம் இசையமைத்துள்ள “சொப்பன சுந்தரி“ திரைப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையினை ஜோயல் க்ரிஷ் எழுதியுள்ளதுடன், மாதவன் மகேஸ்வரன் படத்தொகுப்பு பணிகளையும் கவனித்து இயக்கியுள்ளார்.

மாதவன் மகேஸ்வரன் பல விருது வென்ற குறும்படங்களின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.