உமாகரன் இராசையா குழுவினரின் அடுத்த சரவெடி “அம்மாச்சி” பாடல்

150

நடனசிகாமணி ரூபன் மற்றும் நிரோசன் சிவா தயாரிப்பில் வெற்றி விநாயகன் வழங்கியுள்ள பாடல் “அம்மாச்சி”. பல அதிரடியான பாடல்களை தந்த உமாகரன் இராசையா காமெடி சரவெடியாக இந்தப்பாடலை படைத்திருக்கிறார்.

பாடலுக்கான இசை பத்மயன் சிவா. புட்டு பாட்டு புகழ் ரமணன் பாடியுள்ளார். சொல்லிசையுடன் வாகீஸ்பரன் இணைந்துள்ளார். கலை இயக்கத்தை வி.எஸ்.சிந்துவும், நடன இயக்கத்தை ஊரெழு பகியும் செய்திருக்கிறார்கள்.

பில் ராஜ், ஆதி, அஜந்தன் சிவா, சிந்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தனது முன்னைய பாடல்களில் இருந்து சற்று வித்தியாசத்துடன் காமெடி கலவையாக வரிகளை எழுதி, அதனை அட்டகாசமாக இயக்கியிருக்கின்றார் உமாகரன் இராசையா. பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

பாடல் விமர்சனம்

பாடல் தொடுப்பு..

தயாரிப்பு :- நடனசிகாமணி ரூபன் | நிரோசன் சிவா
வரிகள் மற்றும் இயக்கம் :- உமாகரன் இராசையா
குரல்:-ரமணன்
சொல்லிசை:- வாகீஸ்பரன்_இராசையா
இசை & master – mixing :- பத்மயன் சிவானந்தன்
ஒளிப்பதிவு :- றெஜி செல்வராசா
நடன ஆற்றுகை:-ஊரெழு பகி
கலை இயக்கம் :- VS சிந்து