ஈழத்து கலைஞர்களுக்கு கலைத்துறையில் சிறந்த களத்தினை அமைத்து வரும் கனடா தமிழ் பசங்க நிறுவனத்தின் தயாரிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த “அடியே கோபக்காரி“ பாடலின் வரவேற்பையடுத்து, அடுத்ததாக தயாரித்து வெளிவர இருக்கும் “குற்றவாளி” பாடலின் முதற்பார்வையை வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலுக்கான வரிகளினையும், இயக்கத்தினையும் பிரதீப் செய்துள்ளதோடு இப்பாடலுக்கான இசையினை அனுசன் அவர்களும், இசைக் கலவையினை ஜெரோன் அவர்களும், ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பினை ஆதி AOD அவர்களும் வழங்கியுள்ள நிலையில் இப் பாடல் விரைவில் வெளியாகுவற்கு தயார் நிலையில் உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
