இசையால் புரட்சி.. இளைஞர்களின் உள்ள குமுறல் ‘TEA’ பாடல்

1183

மலையக இளங்கலைஞர்கள் பலரின் பங்கேற்புடன் முன்னணி ராப் இசைக் கலைஞர் சிவி லக்ஸ் இன் இசை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் காணொளிப் பாடல் ‘TEA’. இதனை தமிழன் படைப்பகம் தயாரித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலை தோட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகப்பெரும் பங்களிக்கிறது. ஆனாலும் தோட்டத்தொழிலாளிகளின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. காலம் முழுதும் தோட்டக்கம்பனிகளுக்கு அடிமையாகவும் கூலிகளாகவுமே வேண்டுமா? இதற்கு அப்பாவி மக்களை வைத்து அரசியல் செய்யும் சிலரும் உடந்தையாக இருக்கின்றனர். அழகை மட்டும் காட்டும் மலையகம் என்ற இயற்கை தேசத்தில் சொல்லப்படாத இன்னல்கள் எவ்வளவோ உள்ளன.

ஒடுக்கப்படுவோர், அடக்கப்படுவோர், துயரத்தை வெளிக்காட்ட பயன்படும் இசையில் ஒன்று ”சொல்லிசை“ (rap)

அதற்கமைய தோட்டத்தொழிலாளர்கள் ஆண்டாண்டு காலமாக எதிர்நோக்கும் பிரச்சினையை இந்த பாடல் மூலம் காட்டியிருக்கிறார்கள். இங்கு தோட்டக்கம்பனிகள் பற்றியும் கண்காணிகள், துரைமாரின் நடவடிக்கைகளையும் சொல்லியிருக்கிறார்கள்.

CV laksh பாடல் எழுதி இசையமைத்து இயக்கியிருக்கிறார். நாட்டுபுற இசையோடு ஆரம்பித்த பாடல் பின் ரப் ஆக முடிவடைகிறது.

ஆரம்பத்தில் உரையாடல் ஆங்கில படங்களிற்கான மொழிபெயர்ப்பு போல வேகமாக இருக்கிறது. சொல்ல வேண்டிய கரு, சொல்லிய விதம் என சிறப்பாக இருக்கிறது.

இங்கு பாடகர்கள், நடிகர்களையே அதிகம் காட்டியிருக்கிறார்கள். தோட்ட மக்கள் படும் அவலங்களை கொஞ்சம் கூட காட்டியிருக்கலாம். சிறுவர்கள் பாடசாலை செல்லும் வழி, மழைகால துயரம், பெண்கள் மழைகாலத்தில் படும் துயரம் என ஆங்காங்கே காட்டியிருக்கலாம்.

பாடல் வரிகள் சிறப்பாக இருக்கிறன. ஒளிப்பதிவு முக்கியமாக ‘ட்ரோன்’ மூலமாக எடுக்கப்பட்ட காணொளிகள் நன்றாக இருக்கின்றன. படத்தொகுப்பாளர் ரெஜி செல்வராசாவும் பாடலின் Beat இற்கு ஏற்ப சிறப்பாக தொகுத்திருக்கிறார்.

இசையும் சிறப்பாக இருக்கிறது. பாடல் மூலம் மலைகயக மக்களை புரட்சி செய்ய கேட்டிருக்கிறார் CV laksh. நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கம்பனி முதலாளி, தோட்டத்துரை பாத்திர தெரிவுகளும் அவர்களுக்கான உரையாடலும், ஆவலை தூண்டியிருக்கிறது.

போராட்டம் நடத்துபவன் மிஞ்ச மிகுதிப்பேர் எதிராளியோடு நிற்பான். இதுதான் பல இடத்து புரட்சி தோற்கவும், புரட்சி மீண்டும் ஆரம்பிக்காமைக்கு காரணம்.

மலையக மக்களின் பிரச்சினைகள் இன்னும் வெளிவரவேண்டும். இந்த ரப் இசை பாடல் அதற்கு சிறந்த ஒரு வழி. முன்பு புத்தகப்பாடல்களில் இருந்த புரட்சி இன்று சினிமா வடிவம் பெற்றிருக்கின்றது. ஒடுக்கப்படும் மக்கள் அவலங்களை சினிமாவில் பேசுவது அதன் வீரியத்தை அதிகரிக்கும்.

வாழ்த்துக்கள் பாடல் அணிக்கு.

Music , Story , Direction – Cv laksh
Singer – Angelica
Rap – Cv laksh, APA Arun
Lyrics – Cv laksh
Cast – Naveen, Thusha, Hari, Kamali, Dinesh, Sivakanthan,Santhosh & Friends
Assistant Director – Jeevan
Art director – Gane Benny
Cinematography – Dev , Shano Drone Photography
Editing – Reji Selvarasa
Poster Design – TN sathies
Audio Mixed & Mastering.