காதல், கலக்கல், கொண்டாட்டம் – கதிரின் “பார் சிலோன்” பாடல்

539

ARC Mobiles பொன்னுத்துரை விஜிதன் தயாரிப்பில் கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாடல் “பார் சிலோன்”.

இந்தப்பாடலுக்கான வரிகளை இளந்தாரி புகழ் லதீப் பாலசுப்ரமணியம் எழுதியுள்ளதுடன், நிக்சன் பாடியுள்ளார். பாடல் இசை கிங்ஸ் ராஜன். இசைக்கலவை பத்மயன்.

குகன் ஆருஷ், தமிழ் நிலா, கிரிஷ்டினா ஆகியோர் பிரதான பாத்திரங்களாக தோன்றி நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கான நடன இயக்கம் கண்ணா உதய் மற்றும் கபில் ஷாம்.

கலை இயக்கம் கலாமோகன், சுகிர்தன் and Team. உதவி இயக்குனர்கள் கஜீபன், சுவிகரன், ஆர்.கே.ஸ்டார்க். ஒப்பனை அகல் by ஷகி. தயாரிப்பு நிர்வாகம் பரத்.

காதல் தோல்வியுடன் வெளிநாட்டில் இருந்து வரும் நாயகன் மதுபோதையில் தன் காதலியை நினைத்துப்பாடுவதாக ”பார் சிலோன்“ பாட்டு அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கென பிரத்தியேகமாக நாவற்குழியில் “பார் செட்” அமைத்திருக்கிறார்கள். கலை இயக்கம் பாராட்டுக்குரியது. நிறைய நடனக்கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். குகன் ஆருஷூம் சிறந்ததொரு நடனக் கலைஞன். இவர்களை இணைத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக ஒரு பாடலைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கதிர்.

கூடவே, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பும் அவர் என்பதால் பாடலுக்கு அது பக்கபலமாக அமைந்திருக்கின்றது. பிரான்ஸில் எடுக்கப்பட்டதாக காட்டப்படும் காட்சிகளில் கதிர் பண்ணியிருக்கும் VFX Graphics காட்சிகளும் பிரமாதம்.

Scarboroughவில் அடுத்த காட்சி உங்கள் அபிமான கலைஞர்களின் “ஒருத்தி-2”