‘தூவானம்’ 100 ஆவது திரையிடலும் கலைஞர்கள் கௌரவிப்பும்!

101

வைத்தியர் சிவன்சுதன் தயாரிப்பில் நாடகத்துறை விரிவுரையாளர் ரதிதரன் இயக்கத்தில் வெளிவந்த “தூவானம்“ திரைப்படத்தின் 100ஆவது திரையிடல் இன்று 20ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

இதனுடன் இணைந்ததாக கலைஞர்கள் கௌரவிப்பும், நித்திலம் கலையகம் நடாத்திய குறும்படப்போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பும் பாரம்பரிய உணவுத் திருவிழாவும் அங்கு நடைபெறவுள்ளது.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீ. சற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். நித்திலம் கலையகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது