இணையத்தில் பட்டையக் கிளப்பும் “இளந்தாரி” பாடல்

458

ரித்விக் விஹாசின் தயாரிப்பில் ஸ்ரீ நிர்மலன் இசையில் ஊரெழு பகியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள “இளந்தாரி” பாடல் இணையத்தில் பட்டையக் கிளப்பி வருகின்றது.

லதீப் பாலசுப்ரமணியத்தின் வரிகளில் உருவான இந்தப் பாடலை ராம் ரமணன், கிருசிகா ஆகியோர் இணைந்து பாடியுள்ளார்.

காணொளிப்பாடலாக கலக்கலாக வெளிவந்துள்ள இப்பாடலுக்கான நடனத்தை அமைத்து இயக்கியிருப்பதுடன் தானே அதில் நாயகனாகவும் நடித்திருக்கின்றார் ஊரெழு பகி. நாயகியாக ருவித்தாவும் நடனக் கலைஞர்களாக மீரு, சர்மி, கனி, நிதர்சன், சுமன், ஸ்ரீ நிருசன், சுகி, அனிஸ்ரன், துசியந்தன், வஜிந்தன், ஷான், திலக் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

வட்சுவின் ஒளிப்பதிவிலும் சசிகரன் யோவின் படத்தொகுப்பிலும் வெளிவந்த இந்தப் பாடலின் இசை, ஒளிப்பதிவு, நடன இயக்கம் என அனைத்தும் அசத்தலாக இருப்பதாக பார்வையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

யாழ்ப்பாண பேச்சுவழக்கில் பாடலை சிறப்பாக லதீப் எழுதியுள்ளார். பெண் சகோதரங்களுடன் பிறந்த ஆண் பிள்ளை, சகோதரிகளை கரை சேர்க்கும் வரை தனது காதல் / கல்யாணத்தை தள்ளி வைப்பது, சீதனம் தேவையில்லை எண்டு சொல்வது என சின்னச்சின்ன சங்கதிகளையும் ரசிக்கும் படி பாடலில் உட்புகுத்தியிருக்கின்றார் பாடலாசிரியர்.