ரிஷி செல்வம் இயக்கத்தில் ஜெயந்தன் விக்கியின் இசையில் “தொடுதூரம்” பாடல் நாளை வெளியீடு

234

ஈழத்து இசையமைப்பாளர் ஜெயந்தன் விக்கி இசையமைத்து, பாடி, நடித்துள்ள “தொடுதூரம்” பாடல் நாளை (ஒக்டோபர் 08) வெளியாக உள்ளது.

KM ப்ரொடக்சன்ஸ் கணேசலிங்கம் குபேந்திரன் தயாரிப்பு, வரிகளில் உருவான இந்தப் பாடலை பிரபல ஈழத்து ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் இயக்கி படமாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலில் கதாநாயகியாக நடிகை, மோடல் தீபிகா குணசேகரன் நடித்துள்ளார். ஜெயந்தனுடன் இணைந்து இப்பாடலினை பிரபல பாடகியும் சங்கீத விரிவுரையாளருமாகிய மதுஸ்ரீ ஆதித்தன் பாடியுள்ளார்.

தொலைதூரத்தில் உள்ள போதும் நினைவினால் ஒன்றித்து இருக்கும் தற்போதைய டிஜிட்டல் காதலில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அனைத்தையும் மிகவும் அழகாக படமாக்கியுள்ளதாக படக்குழு குறிப்பிட்டுள்ளது.

இப்பாடலினை நாளை கண்டு மகிழ கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்….