மகளிர் தின வெளியீடாக வந்திருக்கும் “ஈழக்குயில்” கில்மிஷாவின் “காரிகையே” பாடல்

1303

Trm Picture தயாரிப்பில் மகளிர் தின வெளியீடாக வந்துள்ளது “ஈழக்குயில்” கில்மிஷா பாடிய “காரிகையே” பாடல்.

இந்தப்பாடலை வெற்றி சிந்துஜன் எழுதி இசையமைத்திருப்பதுடன், கில்மிஷாவுடன் இணைந்து பாடியுள்ளார்.

காணொளிப்பாடலை வினோத் இயக்கியுள்ளார். ஏ.கே.கமல் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருப்பதுடன் தனோஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

வி.எஸ்.சிந்து கலை இயக்குனராக பணியாற்றியிருப்பதுடன், வி.ரி.அனுஷா ஒப்பனையை மேற்கொண்டுள்ளார்.

இந்தப்பாடலின் இணை இயக்குனராக பவியாலன் பணிபுரிந்திருப்பதுடன், ரகீதன் மற்றும் அனுஷன் ஆகியோர் உதவி இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.

Trm-Picture Canada Inc இதனைத் தயாரித்துள்ளது.

பெண்களின் பெருமையை போற்றும் விதத்தில் காணொளி அதிகப்படியான பெண்களின் பங்களிப்புடன் படமாக்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியாக அதனை செய்திருக்கின்றார் இயக்குனர். ஒளிப்பதிவும் பாடலுக்கு வலுச்சேர்க்கின்றது.

சரிகமப ஜூனியர் சீஸன் 3 இன் வெற்றியாளரான நம்மவர் (ஈழக்குயில்) கில்மிஷா, வெற்றிக்குப் பின்னர் பாடிய முதல் இலங்கைப்பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Music composed by Vetti Sinthujan
Direction – Vinoth
Cinematography – AK kamal
Lyrics – Vetti Thushyanthan
Vocal – Kilmisha, Vetti Sinthujan
Cast – Kilmisha, Vetti Sinthujan & Team
Editor – Thanojan
Mix & Mastered – C.Sutharshan
Makeup – Vt Anusha
Art Director – VS sinthu
Associate director – Paviyalan
Assistant Directors – Rakeethan, Anushan
Production Manager – Lakku SKL
Title design – Vithurshan
Produced By- Trm-Picture Canada Inc