விழ விழ எழுவோம் – “கண்ணம்மா” எழுச்சிப்பாடல்

322

உழைப்பாளர் தினமாகிய மே 1 ஐ முன்னிட்டு சி.வி.லக்ஸ் வெளியிட்டுள்ள பாடல் “கண்ணம்மா”. ”தான் சார்ந்தோருக்காக தன்னை வருத்தி உழைக்கும் அனைத்து உழைப்பாளிகளும் போராளிகள் தான்” என பதிவிட்டுள்ள சி.வி., அனைத்து உழைப்பாளிகளுக்கும் இந்தப் பாடலைச் சமர்ப்பிப்பதாக கூறியிருக்கின்றார்.

பிரியா பாரதியின் வரிகளில் உருவான இந்தப்பாடலை சி.வி.லக்ஸூடன் இணைந்து மிதுன் பாடியுள்ளார். பாடலுக்கான இசை சி.வி.லக்ஸ், இசைக்கலவை சமீல்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரூடியோ லைக் சரத்குமார் மேற்கொண்டுள்ளார். பாடலில் அணிசேர் நடனக் கலைஞர்களாக Agarathi Dance Academy ஐ சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

“விழ விழ எழுவோம்” என்ற வரிகளுக்கு ஏற்ப இலங்கையின் அண்மைய பொருளாதார நெருக்கடி, வரிசை யுகம் குறித்து பாடலில் பேசியுள்ளதுடன், அது சம்பந்தப்பட்ட காணொளிகளையும் பாடலில் இணைத்துள்ளனர். தோல்விகளைக் கண்டு துவண்டு போகக்கூடியவர்கள் அல்ல தமிழர். தற்போதைய நெருக்கடிகளில் இருந்தும் மீளலாம் என்ற நம்பிக்கையை இப்பாடலினூடே விதைத்துச் செல்கிறார்கள்.

Music – Cv laksh
Lyrics – Priyabharathy
Singers – Cv laksh & Mithun
Mixed & Mastered – Shameel JM
Cinematography and Editing – StudioLike sharathkumar
Recording Studio – CVL06 Studio
Dance Crew – Agarathi Dance Academy