தன்னம்பிக்கையூட்டும் வரிகளுடன் “துணிந்து செல்” பாடல்

1272

ராப் இசையில் தனக்கென்று தனி முத்திரை பதித்து வருபவரான ரகு பிரணவன் தந்திருக்கும் புதிய பாடல் “துணிந்து செல்”. இந்தப் பாடலில் வீணாவும் (Veena AE) கூட இணைந்திருக்கின்றார்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், அவ்வாறான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டெழ வேண்டும் எனவும் தங்களது வரிகளினூடாக உரத்துப் பேசியிருக்கின்றார்கள்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இப்பாடலில் ரகு பிரணவனும் வீணாவும் பிரதான பாத்திரங்களாக நடித்திருக்கின்றார்கள். அவர்களுடன் சதாசிவம் வினோஜ், சஞ்ஜய், பிரசாத், நுஷாந்தன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றார்கள்.

பாடலை வீணாவே இயக்கியிருப்பது சிறப்பு. பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு சுமைந்தன் (VTMedia). பாடல் வரிகளுக்கு ஏற்ப காட்சியமைப்பும் நன்றாகவே இருக்கின்றது.

Direction – Veena AE
Vocals & Lyrics – Ragu Branavan | Veena AE
Music & Mixed Mastering – Vishagar Arunan
Visuals & Editing – Sumainthan (VTMedia) VT media.
Art Director – Johnson Srj
Posters – Charan (Atlaaya Designs) Charan Bawan
MUA – Stella
Cast – Veena AE | Ragu Branavan | Sathasivam Vinoj | Sanjai | Prashath | Nushanthan
Audio Distribution – Urban Records Entertainment