பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற யுத்தத்தின் ரணங்களைச் சொல்லும் “ரணம்” குறும்படம்

96

YARL ENTERTAINMENT தயாரிப்பாக சாளினி சார்லஸ் இயக்கத்தில் உருவாகி அண்மையில் யு-ரியூப்பில் வெளியிடப்பட்ட குறும்படம் “ரணம்”.

சசிசகரன் யோவின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் உருவான இந்தப்படத்திற்கான இசை பிரியன் தம்பிராஜா. ஜூலஸ் கொலின், யசீதரன், சத்யன் ஆகியோர் இக்குறும்படத்தில் நடித்துள்ளனர்.

தமிழர்களுக்கு தாலியின் முக்கியத்துவத்தை நாங்கள் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்ட தாலியை, அதன் பெறுமதி தெரியாத ஒருவன், தன் கழுத்தில் மாட்டியிருக்கின்றான். இது எப்படி நிகழ்ந்தது என்பதை மூன்று நிமிட இந்தக்குறும்படம் சொல்லிப்போகின்றது.

யுத்தம் தந்த ரணங்களின் ஒரு பக்கத்தை சொல்லிப்போகும் படமாக இது அமைந்துள்ளது. சமூகத்திற்கு சொல்ல வேண்டிய கதையை படமாக்கிய இயக்குனர் சாளினிக்கு எம் பாராட்டுக்கள்.

இந்தப் படம் குறித்து இசையமைப்பாளர் பிரியன் தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ஒரு யுத்தம் தன் ரணத்தை ஆயுள்வரை கொண்டு செல்லும்.ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒருவகையில் எம் உணர்வுகளை கிளறிக்கொண்டுதான் இருக்கும்.கோடானகோடி ரணங்களில் ஒரு ரணமே இது.