குவியம் டிஜிட்டல் விருதுகள் 2022 – அறிவிப்பு இல. 02 (விண்ணப்பப்படிவம் இணைப்பு)

886

குவியம் டிஜிட்டல் விருதுகள் 2022
(குறும்படங்கள், காணொளிப்பாடல்கள், வெப் தொடர்கள்)

இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களின் படைப்புக்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ‘குவியம்’ இணையத்தளமானது எம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவிக்க தீர்மானித்துள்ளது.

கடந்த வருடமே இதற்கான திட்டத்தை முன்னெடுத்த போதும், உலகளாவிய கொரோனா நெருக்கடியால் அதனை செயற்படுத்த முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் ‘குவியம் விருதுகள் 2022’ இற்கான அறிவிப்புக்களை தற்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகின்றோம்.

பூவரசி மீடியா பிரதான அனுசரணையில் ARC Mobile (பிரான்ஸ்) இணை அனுசரணையில் குவியம் மீடியா பெருமையுடன் வழங்கும் “குவியம் டிஜிட்டல் விருதுகள் 2022”.

நிபந்தனைகள் :
* 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இணையத்தில் வெளியான படைப்புக்களை மட்டும் அனுப்ப வேண்டும். {அதன் இணைப்பை (link) அனுப்பினால் போதுமானது}
* குறும்படங்கள் 25 நிமிடங்களுக்கு மேற்படலாகாது.
* படைப்புடன் சம்பந்தப்பட்ட ஒருவர் குறித்த காலப்பகுதியில் தான் பணியாற்றிய எத்தனை படைப்புக்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். (படைப்புடன் அவருக்கு இருக்கும் தொடர்பை குறிப்பிட வேண்டும்)
* இலங்கையில் இருந்து (வெளியான) அனுப்பப்படும் படைப்புக்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
*நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

குவியம் விருதுகள் 2022 விண்ணப்பப்படிவம் (Google form) நிரப்பும் போது கவனிக்க வேண்டியவை:

* உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை Log in (*Required) செய்ய மறக்க வேண்டாம்.
* கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலை இட்டு அனுப்பினால் போதுமானது.
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பும் போது தனித்தனியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் திகதி 30.06.2022
விருது விழா பற்றிய அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

மேலதிக விபரங்களுக்கு :
தொலைபேசி எண் 0707091999
வட்ஸ் அப் இலக்கம் 0758313005
மின்னஞ்சல் kuviyam.lk@gmail.com