மிரட்டலான கதிரின் ‘BLINK’ டீசர் – ஆரம்பமே அனல் தெறிக்குதே!

1430

ஈழ சினிமாவின் நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவரான கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய குறும்படம் “BLINK”.

இதன் டீசர் கடந்த 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது. டீசரைப்பார்க்கும் போதே மிரட்டலாக இருக்கின்றது. படக்குழுவினரது கடின உழைப்பு தெரிகின்றது. மழைக்காட்சிகள், அதிரடி அக்ஷன் காட்சிகள், அசத்தும் ஒப்பனை என்று மேக்கிங்கில் அசரடித்திருக்கிறார்கள்.

இந்தக் குறும்படத்தின் முதல்நிலை உதவி இயக்குனராக நல்லையா கஜீபனும், உதவி இயக்குனர்களாக ரினோஷா மற்றும் வஜிவரன் ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள். தயாரிப்பு முகாமை சுவிகரன், மக்கள் தொடர்பு சிபோஜன், ஒப்பனை அகல்.

அதிரடி சண்டைக்காட்சிகளின் இயக்குனராகவும், சிறப்பு ஒப்பனைக் கலைஞராகவும் டேரியன் பணிபுரிந்திருக்கின்றார். மிரட்டலான இசையைத் தந்திருக்கின்றார் அருண் குமாரசாமி.

திஷான், இதயராஜ், சமீரா, நியூட்டன், வஜிவரன், ஆர்.கே., கோகுல், மிதுஷான் மற்றும் பிரஷாந்த் நடித்திருக்கின்றார்கள். டீசரைப்பார்க்கும் போதே குறும்படத்தை பார்க்கும் ஆவல் மேலிடுகின்றது. நீங்களும் ஒருமுறை பாருங்கள்.