”இப்பிடி ஒரு ஏஞ்சல் நமக்கு வாய்த்தால்..” இளைஞர்களின் ஏக்கமாக “ஏஞ்சல் காதலி” பாடல்

109

Kaptivate Productions சார்பில் எரோன் சிவகுமார் தயாரிப்பில் கேஷாந்த் இசையில் வெளிவந்துள்ள பாடல் “ஏஞ்சல் காதலி”. பல முன்னணிக் கலைஞர்களின் ஒன்றிணைவில் இந்தப்பாடல் வெளிவந்துள்ளது.

இந்தப்பாடலுக்கான வரிகளை வித்தகன் எழுதியுள்ளார். ஏரோன், கேஷாந்த் மற்றும் வித்தகன் ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலில் ஏரோன், கேஷாந்த் மற்றும் வித்தகனுடன் Cosmo, Bohez ஆகியோரும் நடித்துள்ளனர்.

காணொளிப்பாடலை “குவியம் விருதுகள் 2022” இல் சிறந்த காணொளிப்பாடல் இயக்குனருக்கான விருதினை வென்ற எஸ்.என்.விஷ்ணுஜன் இயக்கியுள்ளார். அச்சுதன் அழகுதுரை ஒளிப்பதிவு பணிகளையும், கணேசலிங்கம் புஷ்பகாந்த் படத்தொகுப்பு பணிகளையும் கவனித்துள்ளனர்.

பாடலுக்கான கலை இயக்கம், லைட்டிங் என சின்னச்சின்ன விசயங்களையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். முக்கியமாக பிருந்தாபன் கருணாநிதியின் வர்ணச்சேர்க்கை பாட்டுக்கு பலம் சேர்க்கிறது. அழகுப்பதுமையாக வந்து போகும் அந்த ஏஞ்சல் பெண்ணும் ரசிக்க வைக்கிறார்.

இன்றைய இளைஞர்கள் பலரின் கனவாக இப்படி ஏஞ்சல் காதலிகள் இருக்கின்றார்கள். கனவு நிஜமாகாமல் கனவாகவே கடந்து போவது தான் துரதிஷ்டம்.